RWO Homeland
முகப்பு | செய்திகள் | அறிக்கைகள் | உறவின் குரல்கள் | கருத்துக்கள்| தொடர்புகளுக்கு |
எம் தேசத்து உறவுகளே!

பன்னாடுகளில் பரந்து வாழும் பாசத்துக்குரிய எம் தேசத்து உறவுகளே!
தாயகத்தில் இருந்து எழும் எம் குரல்கள் உம் செவிகளுக்கு கேட்கிறதா? இங்கிருந்து நாம்படும் வதையும் வலியும்
உம் கண்களுக்குத் தெரிகிறதா? இங்கோர் மனிதப் பேரவலம் நிகழ்வதைப் பார்க்கக் கேட்க உங்கள் இதயம் கனக்கவில்லையா?
“கேளுங்கள் எம் அவலத்தை” “திறவுங்கள் உங்கள் இதயத்தை”
நாலாபுறமும் போர் மேகம் சூழ்ந்து இருள் படிந்து போகிறது எம் வாழ்வு.
 
செய்திகள்

கொட்டும் மழையில் 10 ஆயிரம் பேர் முல்லைத்தீவு நோக்கி இடம்பெயர்வு.
January 8, 2009

கிளிநொச்சியில் இடம்பெறும் மோதல் நிலைமை காரணமாக சுமார் 10 ஆயிரம் பேர் கொட்டும் மழையிலும் கிளிநொச்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு நோக்கி இடம்பெயர்வதாக அம்மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஷெல் வீச்சு காரணமாக வட்டக்கச்சி, ஊரியான் , முரசுமோட்டை , கோரகண்கட்டு மற்றும் கண்டாவளை பிரதேசங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் கிளிநொச்சி மேற்குப் பகுதிக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கடும் மழை பெய்த நிலையில் மழையில் நனைந்தபடி பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாகவிருந்தது.

இவ்வருடத்துக்கான முதல்வார நிவாரணப் பொருட்களை நாம் தற்போது விநியோகித்து வருகின்றோம். செஞ்சிலுவைச் சங்கம் வழித்துணை சேவையை வழங்காமையினால் வன்னிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 20 உணவு லொறிகளில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு வரமுடியாத நிலைமையேற்றபட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு உலக உணவுத் திட்டத்தின் பொருட்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து இல்லாமையினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் கிடைக்கவில்லை. எனினும் தமது பரீட்சை முடிவுகளை மாணவர்கள் இணையத்தளம் ஊடாக பார்வையிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தினக்குரல் - 08.01.2009

©2008 R.W.O HomeLand -info@rwohomeland.com