RWO Homeland
முகப்பு | செய்திகள் | அறிக்கைகள் | உறவின் குரல்கள் | கருத்துக்கள்| தொடர்புகளுக்கு |
எம் தேசத்து உறவுகளே!

பன்னாடுகளில் பரந்து வாழும் பாசத்துக்குரிய எம் தேசத்து உறவுகளே!
தாயகத்தில் இருந்து எழும் எம் குரல்கள் உம் செவிகளுக்கு கேட்கிறதா? இங்கிருந்து நாம்படும் வதையும் வலியும்
உம் கண்களுக்குத் தெரிகிறதா? இங்கோர் மனிதப் பேரவலம் நிகழ்வதைப் பார்க்கக் கேட்க உங்கள் இதயம் கனக்கவில்லையா?
“கேளுங்கள் எம் அவலத்தை” “திறவுங்கள் உங்கள் இதயத்தை”
நாலாபுறமும் போர் மேகம் சூழ்ந்து இருள் படிந்து போகிறது எம் வாழ்வு.
 
செய்திகள்

சீடொட் நிறுவனத்தினரால் ஆம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்து வகைகள் வழங்கல்.
December 30, 2008

அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகள் எதனையும் கொண்டிராததும், விசுவமடு நகரிற்கு தொலைவில் அமைந்ததுமான இளங்கோபுரத்தில் தமிழீழ சுகாதார சேவையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவி வந்தமையினால் ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்தினர் தமது சேவையினை தொடர்வதில் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சி.ஏ.ஆர்.சி நிகழ்ச்சித்திட்டம் கனடா நிறுவன நிதி அனுசரணையுடன் சீடொட் நிறுவனமானது அச் சுகாதார நிலையத்திற்கு மருந்து வகைகளை 28.12.2008 அன்றைய தினம் வழங்கியுள்ளது. அன்றாடம் முந்நூறிற்கும் மேற்பட்ட நோயாளிகள் வைத்திய சேவையினை பெறுவதற்கு இங்கு வருகை தருகின்றனர்.

வன்னிக்கான மருந்து வகைகள் போதியளவில் கிடைக்கப்பெறாத நிலையில் மிகவும் தொலைவில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளிற்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இல்லாத இளங்கோபுரம் கிராமத்தில் நிரந்தரமாக வதிவோரிற்கும் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களிற்கும் இம் மருந்துபொருட்கள் கிடைத்துள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

©2008 R.W.O HomeLand -info@rwohomeland.com