 மழை தணிவடைந்துள்ள நிலையில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது December 29, 2008
வன்னயில் பெய்து வந்த கடும் மழை தணிவடைந்துள்ள நிலையில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இடம்பெயர்ந்த குடியிருப்புக்களில் தங்கியுள்ள மக்கள் இந்நுளம்புகளால் தற்போது பெரும் சிரமங்களையும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளனர்.
நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் மலத்தியோன் போன்ற மருந்துகளை வன்னிக்கு எடுத்துவர படைத்தரப்பு தடைசெய்து வருகின்ற சூழ்நிலையில் உள்ளுரில் இயங்கும் தொண்டு நிறுவனங்கள் நுளம்புவலைகளை இடம்பெயர்ந்த மக்களுக்கு இப்போது வழங்கி வருகின்றன. ஆனாலும் இதனை இடம்பெயர்ந்துள்ள அனைத்து குடுமபங்களுக்கும் வழங்க இந்நிறுவனங்களுக்கு முடியாமலுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈழநாதம் - 29.12.2008 |