 சீடொட் முத்துநகை நம்பிக்கைப் பள்ளியில் மாதாந்த அரங்காற்றுகை நிகழ்வு December 24, 2008
தருமபுரம் 10 ஆம் யூனிற்றில் அமைந்துள்ள முத்துநகை நம்பிக்கைப் பள்ளிச் சிறார்களது அரங்காற்றுகை நிகழ்வானது நேற்று 23.12.2008 அன்று நடைபெற்றது. சீடொட் தலைவரும் சிறிலங்கா நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான க.செல்வநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் சமூக, பண்பாட்டு வழுமியங்களை வெளிப்படுத்தக் கூடியவாறானதும், சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை வெளிப்படுத்துமாறுமமைந்த அரங்க செயற்பாடுகளை சிறார்கள் சிறப்பாக ஆற்றியிருந்தனர்.
பள்ளி ஆசிரியர்களின் சிறப்பான நெறிப்படுத்தலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களது பெற்றோர்களில் பெருமளவிலானோரும், நலன்விரும்பிகளும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். சிறார் உதவி கல்வி மற்றும் புனர்வாழ்வு (சீ.ஏ.ஆர்.ஈ) நிகழ்ச்சித்திட்டம் - கனடா நிறுவனத்தினர் இந்த நம்பிக்கைப் பள்ளித் திட்டத்திற்கு நிதியுதவி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழநாதம் - 24.12.2008 |